அறிவியல்

காலத்தின் மரணம்

யூ-டியூப்பில் 'Time lapse of the universe' என்று ஒரு வீடியோ உள்ளது. எல்லாவற்றையும் விழுங்கி ஏப்பம் விடுகிறது காலம்.(Time). ஆனால் அந்தக் காலத்துக்கே ஒரு இறுதிக்...

Read more

குதிரை

நாம் எதிலும் அதன் 'முழுமையான சித்திரத்தை (complete picture )' பார்ப்பது இல்லை என்கிறார் ஆண்ட்ரு தாமஸ் தன் புத்தகம் ஒன்றில். நடிகர் ஒருவரின் அபார நடிப்பைத்...

Read more

மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அதிகம் சாப்பிடுவது ஏன்?

மன அழுத்தத்தில் இருப்பவர்கள் அதிகம் சாப்பிடுவார்கள் என்றகருத்து உண்டு. அது உண்மையும்கூட. விரும்பியவர்களின் மரணம், காதல் தோல்வி, வேலை கிடைக்காத விரக்தி, பணியில் விரும்பிய ஏற்றம்கிடைக்கமால் போகுதல் இப்படி ஏதேனும்ஒரு காரணம் மன அழுத்தத்துக்கு. ஆனால் பலி ஆவது என்னவோவயிறுதான். கிடைத்ததை எல்லாம் சாப்பிடத் தோன்றும். அதுவும் அளவுக்கு அதிகமாய் உள்ளே செல்லும். விளைவுஅஜீரணக் கோளாறு, உடல் எடைகூடுதல் மற்றும் அதன் தொடர்பாய்இணை நோய்கள்.  அதுவே நீங்கள் மிகுந்த மகிழ்ச்சியில்ஆனந்தமாய் இருக்கிறீர்கள். சந்தோஷத்தில் திளைக்கிறீர்கள் என்றால் உங்கள் கண்முன் உங்களுக்குப் பிடித்த சாப்பாடுப் பொருட்கள்இருந்தாலும் அவற்றை உங்களால் முழுமையாகவழக்கமான அளவுடன் கூட சாப்பிடமுடியாது. கொறிக்க மட்டுமே முடியும்அல்லது அளவாக மட்டுமே சாப்பிடமுடியும்.   ஆனால் உண்மையில் நாம் சந்தோஷமாக இருக்கும்போதுநிறையவும், வருத்தமாக இருக்கும்போது குறைவாகவும் சாப்பிட வேண்டும். ஆனால்இயற்கை அதற்கு நேர்மாறாக அல்லவாநம்மை தயார்படுத்துகிறது.     இதன் பின்னால் ஓர் உளவியல் உண்மைஉள்ளது.  சாப்பாட்டுக்கும், மகிழ்ச்சிக்கும் ஒரு தொடர்பு உண்டு. சாப்பாடு என்பது சாப்பிடுபவர்கள், சமைப்பவர்கள்இரு சாராரையும் சார்ந்ததே.  சமைப்பவர்கள்மன மகிழ்ச்சியுடன் சமைக்கும்போது அதன் சுவையே அலாதியாகஇருக்கும். காரணம் அதில் கூடுதலாகஅன்பு என்ற சுவை கூட்டுப்பொருள் சேர்ந்துவிடுவதே காரணம்.   மன வருத்தத்துடன் சமைக்கும்போது வழக்கமான உப்பு, புளி, காரம்போட்டிருந்தாலும் சுவை எங்கேயோ காணாமல்போய்விடும். காரணம் மகிழ்ச்சி என்றசுவை கூட்டுப்பொருள் சேர்க்கப்படாமல் விடுபடுவதே காரணம்.    அதனால்தான்சொல்கிறேன் சாப்பாடு என்பது வெறும் சாப்பாடுமட்டுமல்ல. நம் உணர்வுகளுடன் சம்மந்தப்பட்டது. அது சமைக்கும் போதாகட்டும் அல்லது சாப்பிடும் போதாகட்டும்.  குழந்தைகளிலேயேஇரண்டு பிரிவினர்களை பார்க்கலாம்.  ஒரு சில குழந்தைகள் விருந்துவிசேஷங்களுக்குச் சென்றால் ஏதோ காணாததைக் கண்டாற்போல்தின்பண்டங்களை அள்ளி அள்ளி சாப்பிடுவார்கள். சில குழந்தைகள் அமைதியாக தேவையானதை தங்களுக்கு விருப்பமானதை மட்டும் அளவாக வாங்கிசாப்பிடுவார்கள்.  காரணம்இதுதான், பாதுகாப்பு உணர்வில்லாத குழந்தைகள், வீட்டில் சுதந்திரமாக சாப்பிட அனுமதிக்கப்படாத குழந்தைகள்பொதுவெளியில் கிடைத்ததை எல்லாம் உள்ளே தள்ளுவார்கள். வீட்டில் சுதந்திரமாக விரும்பியதை சாப்பிட அனுமதி பெற்றிருக்கும்குழந்தைகள் பொதுவெளியில் அமைதியாக சாப்பிடுவார்கள். இதுதான் வித்தியாசம்.  இங்கு உதாரணத்துக்காக குழந்தைகளை எடுத்துக்கொண்டிருக்கிறேன். பெரியவர்களையும் இந்த இரண்டு பிரிவின்கீழ் கொண்டுவர முடியும்.   இது இரண்டைத்தவிர மற்றொரு பிரிவினரும் உண்டு. அதாவது, சிறு வயதில் பொருளாதாரத்தில்பின் தங்கியதாலோ அல்லது வீட்டில் பொறுப்பாககவனிக்க தாய் / தந்தை இல்லாததாலோஅல்லது வேறு ஏதேனும் காரணத்தினாலோவிரும்பிய நேரத்தில் விரும்பிய சாப்பாட்டை சாப்பிட முடியாமல் கிடைத்தநேரத்தில் கிடைத்ததை சாப்பிடும் பழக்கத்துக்கு ஆளானவர்கள் கூட இப்படித்தான். பொதுவெளியில் ‘பொதுவெளி’ என்பதைமறந்து தான் சாப்பிடுவதை நான்குபேர் பார்ப்பார்கள் என்ற ஸ்மரணை இல்லாமல்அள்ளி அள்ளி சாப்பிடுவார்கள்.  மனதுக்குள்பாதுகாப்பு உணர்விருந்தால் நாம் சாப்பிடும் சாப்பாடும்சரியான அளவில் உள்ளே செல்லும், இல்லை என்றால் இப்படித்தான் ‘தாறுமாறுதர்பார்தான்’.  இதனால்தான்காதல் வயப்பட்டவர்கள் பசியே இல்லை என்றுசொல்லிக்கொண்டு குறைவாகவோ அல்லது அளவாகவோ சாப்பிடுவதையும், காதலில் தோல்வி அடைந்தவர்கள் அகோரப்பசியில் அள்ளி அள்ளி சாப்பிடுவதையும்காண்கிறோம்.           காதல் தோல்வியின் போது பாதுகாப்பு உணர்வுகாணாமல் போகிறது. அனாதை ஆகிவிட்டதைப் போலதவிப்பார்கள். அதுவே காதலிக்கும்போது காதல்வாழ்க்கை அழகாக நகர்ந்துகொண்டிருக்கும்போது சொல்லணா பாதுகாப்புஉணர்வு கிடைக்கிறது.   இதுதான்சாப்பிடும் சாப்பாட்டின் அளவையும் நிர்ணயிக்கிறது.  சினிமாக்களில்கூட இந்த உளவியலை அழகாகக்காட்சிப்படுத்தி இருப்பார்கள். ‘ப்ரேக் அப்’ ஆனவர்களும், காதல் தோல்வி அடைந்தவர்களும்வீட்டுக்கு வந்து அம்மாவிடம் ‘பசிக்கிறது, சாப்பிட ஏதாவது இருக்காம்மா’ என கேட்டு தட்டுநிறைய சாதம் போட்டு, வண்டிவண்டியால் குழம்பை ஊற்றி அள்ளிஅள்ளி சாப்பிடுவதாகவும், சாப்பிடும்போதே துக்கம் தாங்காமல் வெடித்துஅழுவதைப் போலவும் காண்பிப்பதை பார்த்திருப்போம்.  ஆக, நம் பாதுகாப்பு உணர்வுக்கும்சாப்பாட்டுக்கும் நிறைய சம்மந்தம் உண்டு. பாதுகாப்பு உணர்விருந்தால் அன்பு, பாசம், கருணைஇப்படி நம் சாத்வீக குணங்கள்முன் வரிசையில் வந்து அமர்ந்துகொண்டு நம்மைவழிநடத்தும். மனோரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூட தேவை பாதுகாப்புஉணர்வுதான். ...

Read more

குடும்பமே தேசத்தின் அடித்தளம் – பாகம் 13

குடும்ப உறவுகளின் குணங்கள்  பல உறவுகள் பாசம் அன்பு என்ற பிணைப்பில் பின்னப்பட்ட சங்கமத்துக்கு குடும்பம் என்று பெயர்.  உலக உயிரோட்டம் நடப்பதற்குக் காரணமாக, உறவுகள் உருவாவதற்குக்...

Read more

குடும்பமே தேசத்தின் அடித்தளம்- பாகம் 12

தாய்ப்பாலின் தன்மைகள் "தாய் முலைப்பாலில் அமுது இருக்கத் தவழ்ந்து தளர்நடை இட்டுச் சென்று பேய் முலை வாய்வைத்து நஞ்சையுண்டு பித்தன் எனப் பிறர் ஏச நின்றாய்" என்று குலசேகராழ்வார் அழகாக...

Read more

எதையும் பிளான் பண்ணி பண்ணனும்!

மகள், மருமகள் பிரசவத்திற்காக அமெரிக்கா செல்லும் பெற்றோர்கள் முதலில் விதந்தோந்துவது அல்லது புலம்புவது அவர்கள் பிள்ளைகள், புறநகரில் வாங்கியுள்ள வீடு, அதன் சுற்றம் பற்றியதாக இருக்கும்.  ...

Read more

திருப்பாவையில் நவீன நிர்வாகத்திறன் சிந்தனைகள் – பாகம் 16

நிர்ணயித்த இலக்கை வெற்றியுடன் குறிப்பிட்ட காலத்தில் முடித்து, குழும உறுப்பினர்களுடன் வெற்றியை வெற்றி வீரனாகக் கொண்டாடிக் கொண்டிருக்கும் காலத்தில், இந்த வெற்றி ஏற்பட்டதற்குக் காரணம் “ நான்...

Read more

திருப்பாவையில் நவீன நிர்வாகத்திறன் சிந்தனைகள் – பாகம் 15

அவ்வப்போது ஏற்படும் வெற்றிகளை கொண்டாடுவதன் மூலம், ஊழியர்கள் ஊக்கம் அடைந்து குறித்த இலக்குகளை எளிதாக அடைவதற்கு வழிவகுக்கும் என்பது ஒரு மரபாக இன்றைய நவீன மேலாண்மைப் பாடத்தில் உள்ளது. “Our...

Read more

கொரோனா வரும்முன் காக்கும் மருந்து!

உலகெல்லாம் கொரோனா ஆட்டிவைக்கும் பொழுது ஒரு சில நாடுகளில் அதன் தாக்கம் மிக மிக குறைவு. இவ்வளவுக்கும் அங்கு அதிக கெடுபிடிகள் இல்லை. அரசுகளே முதலில் நிலையாக...

Read more
Page 1 of 7 1 2 7

Recent News